பொது
சர்வதேச யோகா தின நிகழ்வுகள் கண்டியில்
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (21) கண்டி உதவி இந்தியத் தூதுவராலயம் ஒழுங்கு செய்த யோகா பயிற்சி மற்றும் தியான நிகழ்வுகள் கண்டி உதவி இந்தியத் தூதுவர் டாக்டர் எஸ் ஆத்திரா தலைமையில் கண்டியில் இடம் பெற்றது.
கண்டி அஸ்கிரிய பொலீஸ் மைதானத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட பிரதம செயலாளர் காமினி ராஜரட்ன கலந்து கொண்டார்.
மேற்படி யோகா பயிற்சியை யோகா குரு ஶ்ரீ மகேஷ் கொடிகார மற்றும் சந்திமா கொடிகார ஆகியோர் நடத்தினர்
தியானப் பயிற்சிகளை எஸ். வேலாயுதம் தலைமையிலான கண்டி பிரேமக்குமாரிகள் ராஜயோக நிலையத்தினர் மேற்கொண்டனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று 200 ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உற்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.