பூஜாபிட்டியவில் ஐந்து கூட்டுப் பண்ணைகள்
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
கண்டி – பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் எதிர்கால உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஐந்து கூட்டு விவசாயப் பண்ணைகளை நிறுவுவதற்கு பிரதேச செயலகம் நடவடிக்கை .(21) எடுத்துள்ளது
பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள விகாரைகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் இவ்வாறு விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் வல்பொலபிட்டிய, உடமுதுன, பஹல ஹிங்குல்வல, உடஹிங்குல்வல மற்றும் பல்லேகம பஹல ஆகிய கிராம அதிகாரிகள் பிரிவுகளில் இந்தக் கூட்டுப் பண்ணைகள் செயற்படுத்தப்பட உள்ளது.
காணிகளில் குறுகிய கால உணவுப் பொருட்கள் பயிரிடப்பட உள்ளதாகவும், காணி உரிமைக்கு இடையூறு இன்றி பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், மாவட்டசெயலாளர் சந்தன தென்கோன் தெரிவித்தார்.
காணி உரிமைக்கு மாத்திரமன்றி பிரதேசத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் இடையூறின்றி உற்பத்திளை மேறகொள்ள உள்ளதாகவும் பூஜாபிட்டிய பிரதேச செயலாளர் வத்சலா மாரம்பே தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காக விவசாயம் செய்யப்படாத நிலங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், மூன்று மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய உணவுப் பயிர்கள் இத்திட்டத்தின் கீழ் பயிரிடப்படும்.
இந்தப் பண்ணைகளை பார்வையிடுவதற்காக அண்மையில் கண்டி மாவட்டச் செயலாளர் திரு.சந்தன தென்னகோன் அவர்கள் கள விஜயமொன்றை மேற்கொண்டார்.