விளையாட்டு
தங்கம் வென்ற மாங்குளம் வீராங்கனைக்கு வரவேற்பு
இந்தியாவில் நடைபெற்ற கலப்பு குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம்

இந்தியாவில் கடந்த 27ம் திகதி நடைபெற்ற கலப்பு குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பிரதேசத்தினைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் விஜிதாவிற்கு மாங்குளத்தில் நேற்று முன்தினம் (20) வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து மாங்குளம் சந்திவரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீராங்கனைக்கு பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டார்.
இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், கிராமத்து மக்கள் எனப் பலரும் பங்குகொண்டிருந்தனர்.