தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா அவர்கள் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்தன முன்னிலையில் இன்று (22) பதவிச்சத்தியம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் பதவிச்சத்தியம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புத்தகத்திலும் அவர் கையொப்பமிட்டார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இராஜினாமா செய்த பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே தம்மிக பெரோ இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிச்சத்தியம் செய்து கொள்வதை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (21) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டது.
1967 டிசம்பர் 28ஆம் திகதி களுத்துறை கட்டுக்குறுத்தை பிரதேசத்தில் பிறந்த தம்மிக்க பெரேரா, ஹொரண தக்ஸிலா வித்தியாலையத்தின் பழைய மாணவராவார். அத்துடன் இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமாதாரியாவார்.