“கோட்டகோகம” செயற்பாட்டாளர் ‘ரட்டா’ உட்பட 7 பேர் விளக்கமறியலில்
“கோட்டகோகம” செயற்பாட்டாளரான ‘ரட்டா’ எனப்படும் ரத்திந்து சேனாரத்ன உட்பட 7 பேரை ஜூலை 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.
கல்வி அமைச்சு மற்றும் பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக ஜூன் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட, ‘ரட்டா’ எனப்படும் ரத்திந்து சேனாரத்ன உட்பட 7 பேரை ஜூலை 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, இன்று உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கம் மற்றும் பொலிஸாருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த இவர்கள், மருதானை பொலிஸில், இன்று சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
“கோட்டகோகம” செயற்பாட்டாளரான ரட்டா, மாணவர் சங்கத் தலைவர் வசந்த முதலிகே மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் லஹிரு வீரசேகர ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.