பெண்கள் வன்முறை தகவல்களை பதிவேற்ற தகவல் தளம்
‘USAID’ நிதி அனுசரணையுடன் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் அமுல்படுத்தப்படும் பெண்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் எடுக்கப்படுகின்ற ஒன்றினைந்த முயற்சிகளை வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் பெண்கள் வன்முறை தொடர்பான பல்தரப்பட்ட தகவல்களை ஒரு இடத்திற்கு பதிவேற்றும் தகவல் தளம் ஒன்றை வடிவமைத்து வருகிறது.
அதனடிப்படையில் பெண்கள் வன்முறை சார்ந்து பணியாற்றும் பங்குதாரர்களிற்கு குறித்த தரவுத்தளம் தொடர்பாக விழிப்பூட்டும் முதலாவது பயிற்சிப் பட்டறை கடந்த 21ம் திகதி மாவட்ட செயலக பேரவை மண்டபத்தில் இணைய வழியூடாக இடம்பெற்றுள்ளது.
இதன் வளவாளராக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே. கலைச்செல்வன் கலந்து கொண்டார்.
இதனூடாக வட மாகாணத்தில் பெண்கள் வன்முறை தொடர்பான தகவல்களை ஒரு இடத்தில் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதுடன் துறைசார் உத்தியோகத்தர்கள் மட்டும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.
இப் பயிற்சிப் பட்டறையானது ஏனைய மாவட்டங்களிலும் இடம்பெற்று வருவதுடன் இதனூடாக துறைசார் உத்தியோகத்தர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு தரவுத்தள வடிவமைப்பு செம்மைப்படுத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தினை தொடர்ந்து இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன், சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடும் அதிகாரி எஸ்.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் ஏ.துளசினி, கள உத்தியோகத்தர் வை. மணேன்மணி உள்ளிட்டோர் நேரடியாகவும் பிரதேச செயலாளர்கள், பெண்கள் சார்ந்து பணியாற்றும் பல்வேறு திணைக்கள மற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள் இணையவழி ஊடாக கலந்து