குடும்ப அட்டை முறையில் எரிபொருள் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டை முறையினை மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலங்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் அநேகமான பிரதேச செயலக பிரிவுகளில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி.தட்சணகௌரி தினேசின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக பட்டிப்பளையில் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டையின் அடிப்படையில் நேற்று (26) கொக்கட்டிச்சோலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்னை மற்றும் டீசல் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கின்ற அத்தியாவசிய பொருட்களை சகலருக்கும் கிடைக்கின்ற வகையில் பங்கீடு செய்வதற்கு வசதியாக ஒரு குடுப்பத்தில் யாராவது ஒருவர் மட்டும் அட்டையினை பயன்படுத்தவும், எரிவாய்வு என்றால் ஒரு மாதத்திற்கு ஒன்று என்ற வகையிலும் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும், மண்ணெண்ணை குறித்த அளவிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் பங்கீட்டு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.