‘இலங்கையை நம்பி எந்த நாடும் உதவ மாட்டாது’ – பேராசிரியர் ரோகன லக்ஸ்மன் பியதாச
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
“இலங்கையின் நாலா பக்கமும் நாள் முழுதும் அரச எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடக்கும்போது இந்த நாட்டை நம்பி, எந்த ஒரு நாடும் உதவ முன்வரமாட்டாது, சர்வகட்சி அரசு ஒன்றை ஏற்படுத்தி சிறிய அமைச்சரவையுடன் தேர்தலுக்கு சென்றால் சர்வதேசம் எம்மை நம்பும்” என ஶ்ரீ.ல.சு.க.ன் உப தலைவர் பேராசிரியர் ரோகன லக்ஸ்மன் பியதாச நேற்று (27) தெரவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“தற்போது நாட்டில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் அதிகரித்து விட்டன். கிராமப் புறங்களில் பசளை கோரி விவசாயிகள் ஆர்பாட்டம் செய்ய, நகரப்புறங்களில் வாகனங்கள் எரிபொருளுக்காக பல மைல் தூரம் தரித்து நிற்கின்றன. எரிவாயு, மண்ணெண்ணை மற்றும் அரிசி, பால்மா மருந்துப் பொருட்கள் என்பவற்றை கேட்டு மக்கள் ஆர்பாட்டம் செய்கின்றனர்.
நீதி நியாயம் கேட்டு மற்றொரு கூட்டம் ஆர்பாட்டம் செய்கிறது. பாடசாலைகள் மற்றும் உயர் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மின் வெட்டுகாரணமாக சுற்றுலா ஹோட்டல்களில் பிரச்சினை.சிறிய தேனீர் கடைகளுக்குப் பூட்டு, பாண் பணிஸ் போன்ற வற்றை வாங்க முடியாத நிலை.
இப்படியாக எத்தகையோ போராட்டங்கள். இந்நிலையில் எந்த ஒரு நாடும் எமக்கு உதவ முன்வர மாட்டாது
இன்று அரச நிர்வாகம் என்று ஒன்று இல்லை. அரச ஊழியர்கள் வீடுகளில் தங்கி உள்ட்ளனர். காரியாலயம் செ்ல்வர்கள் கூட விவசாய உற்பத்தியில் ஈடுபடுவதாக செய்தி.
அரசு அதிகாரிகளைக் கூட்டி ஜனாதிபதி ஏதோ கூறுகிறார். அரச அதிகாரிகள் ஜனாதிபதியிடம் ஏதோ கூறுகின்றனர். நாட்டில் ஏதோ நடக்கிறது. பொலிசாருக்கு மக்கள் கட்டுப்படுவதில்லை. அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொள்வதில்லை. இதனால் நாடு அராஜகமாகியுள்ளது.
எனவே சர்வகட்சி அரசு ஒன்றை ஏற்படுத்தி குருகியகாலத்தி்றகு சிறிய அமைச்சரவையுடன் அதனை நடத்தி தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும். அவ்வாறான அரசுக்கு குறிப்பிட்ட கால எல்லையும் குறித்த திகதிக்கான வேலைத்திட்டமும் இருக்க வேண்டும். இப்படியான ஒரு நிலை உருவாக்கப்படால் ஒழிய நாட்டை மீட்க முடியாது” என்றும் பேராசிரியர் ரோகன லக்ஸ்மன் பியதாச கூறினார்.