மொடர்னா தடுப்பூசி பெற்றவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி 99.5% அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மொடர்னா தடுப்பூசி பெற்றவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெற்றிகரமாக அமைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமைஇ நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்
நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சிகளின் அதிகரிப்பை தீர்மானிக்க வெவ்வேறு தடுப்பூசிகளைப் பெற்ற நபர்களிடமிருந்து தடுப்பூசி ஏற்றப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளைச் பரிசோதனை செய்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மொடர்னா தடுப்பூசியைப் பெற்றவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி தொண்ணூற்றைந்து சதவீதம் (99.5%) அதிகரித்துள்ளது.
ஸ்புட்னிக் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி வீதம் எழுபது வீதத்தால் (70%) உயர்ந்துள்ளது.
சைனோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி வீதம் அறுபது (60%) வீதமாகும். இவர்கள் குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி வளர்ச்சியைக் கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.