crossorigin="anonymous">
பிராந்தியம்

திருகோணமலை வைத்தியசாலையில் தேசிய உணவு உற்பத்தி நிலையம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட போசனசாலை தேசிய உணவு உற்பத்தி நிலையமாக இன்று (01) மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவினால் திறந்து வைக்கப்பட்டது.

இது மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட 04 வது தேசிய உணவு உற்பத்தி நிலையமாகும். இதற்கு முன்னர் கந்தளாய், கிண்ணியா, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் இவ்வுணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தரமான தூய்மையான உணவுகளை வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இவ்வுணவகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உணவு செய்கை முறை தொடர்பில் இரண்டு வருடம் பயிற்சிகளை பெற்றவர்களே இதனை முன்னெடுத்து வருகின்றனர்.

புனர்நிர்மாண வேலைகளை இலங்கை இராணுவத்தின் 22 வது படைப்பிரிவினர் மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், 22வது படைப்பபிரிவின் கட்டளை அதிகாரி, வைத்திசாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 88 − 83 =

Back to top button
error: