இராணுவத் தளபதி பனாகொட படைத் தலைமையகத்திற்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நேற்று (02) பனாகொட மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்
பனாகொட மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் அதன் கட்டளையின் கீழ் உள்ள 14 மற்றும் 61 படைப் பிரிவுகளில் சேவையாற்றும் படையினருக்கு உரை நிகழ்த்தினார்.
பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூட வளாகத்தில் நான்கு இலக்கங்களுக்கு மேற்பட்ட பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இந்த உரை இடம்பெற்றது.
மேல் மாகாணத்தில் மக்கள் செறிந்து வாழும் கொழும்பு பிரதேசத்தில் பொது மக்களை ஈர்க்கக்கூடிய விதத்தில் இன்றுவரை சேவையாற்றிய படையினரை தளபதி பாராட்டினார்.
உரையின முடிவில், மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லா அவர்கள் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி நன்றி பாராட்டினார்.
14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேன, 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மோகன் ரத்நாயக்க, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ முகாமில் உள்ள அனைத்துப் படைத் தலைமையகங்களின் பிரதிநிதிகள் இராணுவத் தளபதியின் உரையை கேட்பதற்கு அங்கு வருகைதந்திருந்தனர்.