இலங்கைக்கான ஓமானியத் தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கைக்கான ஓமானியத் தூதுவர் மாண்புமிகு ஜூமா ஹம்தான் ஹசன் அல்மலிக் அல்ஷேஹி (Juma Hamdan Hassan AlMalik Alshehhi) நேற்று (04) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்.
எரிபொருள், எரிவாயு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக ஓமன் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கை – ஓமன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான ஓமானியத் தூதுவரின் 8 வருட சேவைக்காலத்தில் வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டார்.