இராஜினாமா செய்யத் தயார் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்தி எதிர்ப்பு கோசம்
“ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமாரவின் வேலைத்திட்டம் வெற்றியளிக்குமாயின் அவரை பிரதமராக நியமிக்கவும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியில் இருந்து நான் இராஜினாமா செய்வேன். அமைச்சர்களும் இராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாங்கள் வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளோம். அதனை முன்னெடுக்க உதவுங்கள், வீதிக்கு இறங்க வேண்டிய தேவையில்லை. எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்றத்தை கூட்டி, விவாதத்தை நடத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.
அதேவேளை இலங்கை பாராளுமன்றத்திற்கு இன்று (05) வருகை தந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ”கோட்டா கோ ஹோம்” என எதிர்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்ப்பினை காட்ட ஆரம்பித்தனர்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே எதிர்கட்சியினர் பாராளுமன்றத்தில் இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிரான எதிர்ப்பு கோசம் எழுந்தது.
இதன் காரணத்தினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தவினால் சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டது.
https://fb.watch/e3X7j1fOtK/