பலாப்பழத்தை பயன்படுத்தி மேலதிகமான உள்ளூர் உணவு
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தலைமையில் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும் பலாப்பழத்தைப் பயன்படுத்தி மேலதிகமான உள்ளூர் உணவுகளை தயாரிப்பது தொடர்பான செயலமர்வு ஒன்று நேற்று (06) இடம்பெற்றது.
கண்டி மாவட்டத்தில் பூஜாபிட்டிய, அங்கும்புர, பொக்காவல உள்ளிட்ட பிரதேசங்களில் உபரிமிதமாகக் காணப்படும் பலாப்பழத்தைப் பயன்படுத்தி பல்வேறு உணவு வகைகளின் உற்பத்தி பற்றி இந்த செயலமர்வில் மேற்கொள்ளப்பட்டது.
இதன் கீழ், உலர் பலாப்பழத்தை பாதுகாத்தல், பலா விதைகளை பாதுகாத்தல் போன்றவற்றிற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் பலா விதை ரொட்டி தயாரிக்கும் முறை போன்ற பவ விடயங்கள் கிராம மக்களுக்கு செய்து காட்டப்பட்டது.
கண்டி மாவட்ட செயலாளர் திரு.சந்தன தென்னகோன் தலைமையில் பொக்காவல விஜயராம விஹாரையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
பூஜாபிட்டிய பிரதேச செயலாளர் திருமதி வத்சலா மாரம்பே உணவு தயாரிப்பு தொடர்பில் கிராம மக்களுக்கு தெளிவு படுத்தினார்.
கண்டி மாவட்டச் செயலாளர் திரு.சந்தன தென்னகோன் ஹெலசர இளைஞர் அமைப்பின் ஆதரவில் விதைப் பொதிகள் போன்ற வற்றை விநியோகித்தார்.
இந்நிகழ்வில் கண்டி மாவட்ட திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் திருமதி ரம்யா விஜேசுந்தரவும் கலந்துகொண்டார்.