crossorigin="anonymous">
வெளிநாடு

துப்பாக்கிச் சூட்டில் ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்

ஜப்பானில்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துள்ளார்

ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள நரா நகரில் இன்று (08)  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென துப்பாக்கியால் அவரை நோக்கி நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் செய்தார்

இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார் ஷின்சோ அபேவை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த இளம் பெண் ஒருவர் அளித்தப் பேட்டியில்

“நாங்கள் எல்லோரும் அபேவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோம். திடீரென ஒரு சத்தம் கேட்டது. அபே அதிர்ச்சியில் உறைந்ததுபோல் நின்றார். அது என்னவென்று உடனே ஊகிக்க முடியாமல் நாங்கள் நின்றபோது இன்னொரு முறை அதே சத்தம் கேட்டது. அப்போது எங்களுக்கு அது துப்பாக்கிச் சத்தம் என்று புரிந்தது. அபேவை சுற்றி புகையும் கிளம்பியது.”என தெரிவித்துள்ளார்

நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்: ஷின்சோ அபே நீண்ட காலமாக ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். முதலில் 2006 ஆம் ஆண்டு அவர் பிரதமரானார். ஓராண்டு மட்டுமே அவர் பதவி வகித்தார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் அவர் தொடர்ந்து பிரதமராக இருந்தார். கடந்த ஆகஸ்ட் 2020ல் அவர் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜப்பான் நாட்டில் உலகிலேயே மிகக் கடுமையான துப்பாக்கி பயன்பாட்டுச் சட்டம் உள்ளது. அந்நாட்டின் மக்கள் தொகை 12.5 கோடி. அங்கு துப்பாக்கி லைசன்ஸ் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஜப்பான் நாட்டு குடிமகனாகவே இருந்தாலும் கூட அங்கே ஒருவர் துப்பாக்கி வைத்துக் கொள்ள காவல்துறையின் பல்வேறு கெடுபிடிகளை எதிர்கொள்ள வேண்டும்.

அதனாலேயே அங்கே இதுபோன்ற துப்பாக்கி வன்முறைகள் மிகவும் குறைவு. அப்படியிருந்தும் நாட்டின் முன்னாள் பிரதமர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருப்பது அந்நாட்டு ஆட்சியாளர்கள், பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான் அரசு துப்பாக்கி பிரயோக சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு ஒன்றை  நியமித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 1 =

Back to top button
error: