crossorigin="anonymous">
பொது

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலக கோரி போராட்டம்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தரும் பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (09) சனிக்கிழமை  கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்

களனி பல்கலைக்கழகத்துக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி  நேற்று (08) மாலை பேரணியா கொழுன்பு மற்றும் காலிமுகத்திடல் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியில் சென்றுள்ளனர்

இதேவேளை ஒருபகுதி மாணவர்கள் நேற்று இரவோடு இரவாக வருகை தந்து தங்கியிருந்து இன்று (09) நடைபெறவுள்ள பாரிய போராட்டத்தில் கலந்துகொள்ள தயாராகியுள்ளனர்

அதேவேளை நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று (09) சனிக்கிழமை நடைபெறவுள்ள பாரிய போராட்டத்தில் கலந்துகொள் கொழும்பு கோட்டை மற்றும் கொழுன்பு காலிமுகத்திடல் ‘கோட்டாகோகம’ நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 4

Back to top button
error: