ஆர்ப்பாட்டகாரர்கள் இலங்கை ஜனாதிபதி மாளிகை முற்றுகை
கொழும்பில் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பதற்றம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது இலங்கை ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இட்டு ஜனாதிபதி மாளிகையினுள் நுழைந்துள்ளனர்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தரும் பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (09) தற்போது கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தரும் பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (09) தற்போது கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் கொழும்பில் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபாட்டுவரும் பொது மக்கள் பொலிஸ் இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவதற்கு முற்பட்ட வேளையில் அந்த இரும்புகள் விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 சிவிலியன்களும் இரண்டு பொலிஸாரும் அடங்குவதக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Ordinary Sri Lankan's breach multiple barriers on their way to President's house#lka #SriLanka #SLnews #News1st #ProtestLK #CrisisLK #EconomyLK #GotaGoGama #Aragalaya #Eng. pic.twitter.com/hKjliHI5wc
— Newsfirst.lk Sri Lanka (@NewsfirstSL) July 9, 2022
Protestors break through barriers leading to President's House in Colombo#lka #SriLanka #SLnews #News1st #ProtestLK #CrisisLK #EconomyLK #GotaGoGama #Aragalaya #Eng. pic.twitter.com/CNptUjJoXz
— Newsfirst.lk Sri Lanka (@NewsfirstSL) July 9, 2022