crossorigin="anonymous">
பொது

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய தயார்

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தயார்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் (09) தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (09) கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (09) அறிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 + = 87

Back to top button
error: