இலங்கையின் புதிய ஜனாதிபதியை இம்மாதம் எதிர்வரும் 20ஆம் திகதி நியமிப்பதற்கு நேற்று (11) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்
கட்சித் தலைவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அரசியலமைப்புக்கு அமைய புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கும் தீர்மானித்துள்ளனர்.
புதிய ஜனாதிபதியை தெரிவு வேட்புமனு தாக்கல் அடுத்தவார செவ்வாய்க் கிழமையன்று நிறைவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து எதிர்வரும் வாரத்தில் புதன் அல்லது வியாழக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டி வாக்கெடுப்பு நடத்தி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் இலங்கை ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்யப் போவதாக பிரதமருக்கும் சபாநாயகருக்கும் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 09 ஆம் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து இலங்கை ஜனாதிபதி மாளிகை, இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பிரதமர் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமளிகை ஆகியவற்றை கைப்பற்றி அங்கு தங்கியிருந்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்