பசில் ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற முயற்சி, தோல்வி
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சாவின் சகோதரரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வேதேச விமான நிலையத்தின் ஊடக இன்று (12) அதிகாலை நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்தபோது அங்கிருந்த பயணி ஒருவரினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாடு செல்வதற்காக இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வேதேச விமான நிலையத்துக்கு பசில் ராஜபக்ச சென்றபோது, அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு இலங்கை குடிவரவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
குடிவரவு அதிகாரிகள், தமது கடமைகளை புறக்கணித்தமையை அடுத்து, பசில் ராஜபக்ச மீண்டும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் நாட்டுக்குள் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 09 ஆம் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து இலங்கை ஜனாதிபதி மாளிகை, இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பிரதமர் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமளிகை ஆகியவற்றை கைப்பற்றி அங்கு தங்கியிருந்து பதவி விலகுமாறு கோரி தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Passenger at Katunayake airport protest over Basil Rajapaksa pic.twitter.com/2by8X9UZNd
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 12, 2022