பொது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றும் அவரது பாரியார் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் இன்று (13) அதிகாலை மாலைதீவு நோக்கி புறப்பட்டதாக இலங்கை விமானப்படை அறிக்கையொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவின் தலைநகரான மாலேயை நோக்கி ஜனாதிபதி பயணித்துள்ளதுடன் இலங்கை ஜனாதிபதி மாலைதீவு விமான நிலையத்தை வந்தடைந்ததாக மாலைதீவு விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்
மாலைதீவு மாலேயை சென்றடைந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களை அங்கிருந்து கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.