மாலைதீவில் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக போராட்டம்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றும் அவரது பாரியார் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் இன்று (13) அதிகாலை மாலைதீவு சென்றடைந்ததை தொடர்ந்து மாலைதீவிலும் கோட்டாபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திட்டுள்ளனர்
மாலைதீவின் தலைநகரான மாலேயில் உள்ள இலங்கையர்கள் போராட்டம் நடத்துவதை அங்குள்ள சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன
மாலைதீவில் உல்லாச விடுதியில் இருக்கும் கோட்டாபய ராஜபக்சவை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்த இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், அரசியலமைப்பின் 37 – 1 ஆம் சரத்தின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இலங்கையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 09 ஆம் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து இலங்கை ஜனாதிபதி மாளிகை, இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பிரதமர் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமளிகை ஆகியவற்றை கைப்பற்றி அங்கு தங்கியிருந்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
Sri Lankans are protesting in the Maldives after the govt of #Maldives provided safe haven for @GotabayaR Follow @DhiyaresNews on Facebook for live coverage of the protest. #SriLankaProtests pic.twitter.com/yyt4FonQ1d
— Ahmed Azaan (@axanner) July 13, 2022
Maldives police trying to disperse the protest against absconding Sri Lanka President Gotabaya Rajapaksa! Keeping Islamophobic Gotabaya in the country will be politically costly for the Maldivian regime. pic.twitter.com/hSP1FFbJWp
— Ashok Swain (@ashoswai) July 13, 2022