crossorigin="anonymous">
பொது

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜினாமா – மாலைதீவு சபாநாயகர்

கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவி இராஜினாமா அறிவிப்பு நாளை - இலங்கை சபாநாயகர்

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு பாராளுமன்ற (மஜ்லிஸ் – the People’s Majis) சபாநாயகர் மொஹமட் நஷீட் இன்று (14) அறிவித்துள்ளார்.

மாலைதீவு பாராளுமன்ற (மஜ்லிஸ் – the People’s Majis) சபாநாயகர்  மொஹமட் நஷீட் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், இராஜினாமா கடிதம் இன்று கிடைத்ததை இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் உறுதிப்படுத்தி, அதன் சட்டபூர்வ தன்மை குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் இராஜினாமாவை உத்தியோகப்பூர்வமாக நாளைய தினம் (15) அறிவிக்கப்படும் என்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 09 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 − 75 =

Back to top button
error: