‘இராஜினாமா அறிவிப்பு’ சபாநாயகர் அலுவலகம் தயார்
ஜனாதிபதி பதவி இராஜினாமா உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தின் சட்டபூர்வ தன்மை குறித்து ஆராயப்பட்ட பின்னர் உத்தியோகப்பூர்வ இராஜினாமா அறிவிப்பு இன்று (15) வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி பதவி இராஜினாமாவை உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்கு இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகம் தயாராகி வருகிறது
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று (13) அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது
இராஜினாமா கடிதம் நேற்று (13) கிடைத்ததை இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் உறுதிப்படுத்தி, அதன் சட்டபூர்வ தன்மை குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது
இராஜினாமா கடிதத்தின் சட்டபூர்வ தன்மை குறித்து ஆராயப்பட்ட பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி பதவி இராஜினாமாவை உத்தியோகப்பூர்வமாக இன்று (15) அறிவிக்கப்படும் என் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.