கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜினாமா – சபாநாயகர் அறிவிப்பு
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதி பதவி இராஜினாமாவை, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (15) சற்று முன்னர் இலங்கை சபாநாயகர் உத்தியோகப்பூர்வ இல்லத்தில்
அறிவித்தார்
அதற்கமைய 2022 ஜூலை 14 ஆம் திகதி முதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று (13) அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருந்தது
இராஜினாமா கடிதம் நேற்று (13) கிடைத்ததை இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் உறுதிப்படுத்தி, அதன் சட்டபூர்வ தன்மை குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகம் நேற்று தெரிவித்திருந்தது
அதனடிப்படையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதி பதவி இராஜினாமாவை, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (15) சற்று முன்னர் உத்தியோகப்பூர்வ அறிவித்தார்.
Watch Live: Special Press Briefing by Speaker Mahinda Yapa Abeywardena
Watch Here: https://t.co/pkj2O8RGAH #lka #SriLanka #SLnews #News1st #BreakingNews #GotabayaRapaksa #President #Speaker #PoliticsLK #SriLankaProtests #ProtestLK
— Newsfirst.lk Sri Lanka (@NewsfirstSL) July 15, 2022