எரிபொருள் விலை குறைப்பு
சிபெட்கோ (CEYPETCO) நிறுவனம் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.
சிபெட்கோ (CEYPETCO) நிறுவனம் நேற்று (17) இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக
92 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 450 ரூபாவாகும்.
95 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.
ஒட்டோ டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 440 ரூபாவாகும்.
சுப்பர் டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 510 ரூபாவாகும்.
இதேவேளை, லங்கா ஐஓசி Lanka IOC நிறுவனமும் எரிபொருள் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதியில் இருந்து ஒக்ரைன் 92 பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் எனபனவற்றை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டிருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.