crossorigin="anonymous">
பொது

இலவச மருத்துவ முகாம்

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (18) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

இதன்போது தொற்றா நோய்களான இரத்த சீனி மட்டம், இரத்த கொலஸ்ரோல் மட்டம், உடற்திணிவு சுட்டி, வயிற்றுப்பருமன், இரத்த அழுத்தம் (பிறசர்) ஆகிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மருத்துவ முகாமில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 − = 74

Back to top button
error: