இலங்கையின் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற அமர்வு இன்று (20) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுட
இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்
இலங்கையில் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுக்களை ஏற்றுகக்கொள்வதற்காக இலங்கை பாராளுமன்றம் நேற்று (19) கூடியபோது இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரின் பெயர்கள் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன.
பாராளுமன்றத்தின் மூலம் அடுத்துவரும் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய இன்று (20) நடத்தப்படும் வாக்கெடுப்பை ஜனநாயத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்
இலங்கையின் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதால் பாராளுமன்றம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.