பொது
கொரோன தொற்று மீண்டும் அதிகரிப்பு
இலங்கை சுகாதார அமைச்சு இலங்கையில் தற்போது கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி நாடு முழுவதும் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர். சமிதா கினிகே எச்சரிப்பு விடுத்துள்ளார்.
தடுப்பூசி போடாதவர்களை விட தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்படும் விகிதம் குறைவாக உள்ளதாகவும் தடுப்பூசி போட்டவர்கள் வைரஸிலிருந்து சிறப்பாக பாதுகாக்கப்படுகிறார் என்பதனை நிரூபித்துள்ளதாக மேலும் அவர் கூறியிருந்தார்.