ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 8 வது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (21) சற்று முன்னர் புதிய ஜனாதிபதியாக இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்
ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாண செய்யும் நிகழ்வுக்கு விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக அதி விஷேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி இருப்பதால், இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதனாலும் புதிய இடைக்கால ஜனாதிபதியாக பாராளுமன்றத்தில் நேற்று (20) இரகசிய வாக்கெடுப்பு மூலம் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.