வெளிநாடு
இந்திய ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி
இந்தியாவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு இந்திய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இந்திய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் திகதி நிறைவடைவதால், புதிய இந்திய ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பாஜக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். தேர்தல் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது.
இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள 64 வயதாகும் திரவுபதி, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பழங்குடியினக் குடும்பத்தில் பிறந்தவர்.