ரணிலின் வெற்றிடத்திற்கு வஜிர அபேவர்தன
பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் நேற்று முன்தினம் (21) அறிவித்திருந்தார்
வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தனவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் நேற்று (22) இரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதனால் 2022 யூலை 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாகவும் ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் தனக்கு அறிவித்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் நேற்று முன்தினம் (21) தெரிவித்தார்.