குரங்கு அம்மை நோய், பொது சுகாதார அவசர நிலை – W H O
சர்வதேச அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ளதன் காரணமாக உலக சுகாதார நிறுவனம் (W H O) சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது
சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடன அறிவிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) அறிவித்துள்ளார்.
குரங்கு அம்மை நோய் தொடர்பாக வல்லுநர் குழு உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 70 -க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை இப்போது தொற்று பரவி உள்ளது.
இதுவரை உலகம் முழுவதும் 75 நாடுகளில் சுமார் 16,000 குரங்கு அம்மை பாதிப்புகள், உறுதி செய்யப்பட்டுள்ளது.
🚨 BREAKING:
"For all of these reasons, I have decided that the global #monkeypox outbreak represents a public health emergency of international concern."-@DrTedros pic.twitter.com/qvmYX1ZBAL— World Health Organization (WHO) (@WHO) July 23, 2022
With the tools we have right now, we can stop #monkeypox transmission and bring this outbreak under control. It’s essential that all countries work closely with affected communities to adopt measures that protect their health, human rights and dignity.pic.twitter.com/DqyvRtB8w2
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) July 23, 2022