ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலதா மாளிகைக்கு விஜயம்
கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (30) விஜயம் செய்து சமயக்கிரியைகளில் ஈடுபட்டார்.
தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி, கண்டி நகரபிதா கேசர சேனநாயக்க மற்றும் அமைச்சர்களினால் வரவேற்கப்பட்டு தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தலதா மாளிகையில் புனித தந்ததாது பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மேல்மாடிக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மலர் அஞ்சலி செலுத்தி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, திலும் அமுனுகம, குணதிலக ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜயவர்தன, ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஐக்கிய லக் வனிதா. முன்னணியின் தலைவி சாந்தினி கோன்கஹகே, கம்பளை நகரபிதா சமந்த அனுரகுமார உள்ளிட்ட கண்டி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.