விளையாட்டு
மல்யுத்தத்தில் நெத்மி அஹின்ஸா சாதனை
பொதுநலவாயப் போட்டிகளில் பெண்களின் பிறீஸ்டைல் பிரிவுக்கான வெண்கலப் போட்டியில் நெத்மி அஹின்ஸா பெர்ணாண்டோ சாதனை படைத்துள்ளார்
பொதுநலவாயப் போட்டிகளில் பெண்களின் பிறீஸ்டைல் 57 கிலோ கிராம் பிரிவுக்கான வெண்கலப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் இரேனே சைமொனிடிஸை வென்றே இச்சாதனையை நெத்மி நிகழ்த்தியுள்ளார்.
பொதுநலவாயப் போட்டிகளில் பதக்கம் வென்ற இலங்கையின் இளையவராகவும், மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதலாமவராகவும் நெத்மி அஹின்ஸா பெர்ணாண்டோ மாறியுள்ளார்.