பொது
வீட்டு அறைக்குள் விழுந்த சிறுத்தை
நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லோகி கூம்வூட் தோட்டத்தில் நாயை வேட்டையாடுவதற்கு துரத்திக்கொண்டு வந்த சிறுத்தை, லயன் வீட்டுக் கூரையை உடைத்துக்கொண்டு வீட்டின் படுக்கை அறைக்குள் விழுந்த சம்பவம் நேற்று முன்தினம் (04) இரவு இடம்பெற்றுள்ளது
வீட்டைச் சேர்ந்தவர்கள் பதற்றமடைந்து வீட்டிலிருந்து வெளியேறி கதவை வீட்டுக்கு வெளியே அடைத்துக்கொண்டுள்ளனர்
வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட சிறுத்தையை வனஇலாக அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர்
சிறுத்தையை பார்வையிடுவதற்கு சென்றிருந்த ஒருவர், சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுத்தையை மயக்கஊசி செலுத்தி பிடித்த வனஇலாகா அதிகாரிகள், அதனை காட்டுக்குள் விடுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்