“இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பாதையாக வருவாய் ஈட்டுதல்”
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கலந்துரையாடல்
“இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பாதையாக வருவாய் ஈட்டுதல்” தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடலொன்று நேற்று (09) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
சர்வதேச பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் நிபுணத்துவம் கொண்ட ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிலைபேறான நிதி மையத்தின் (Sustainable Finance Hub of the UNDP) பணிப்பாளர் திரு. மார்கோஸ் நெடோ தனது அனுவபம் மற்றும் அறிவை பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டு இதில் பிரதான உரையை நிகழ்த்தினார்.
அரசங்க நிதி பற்றிய குழுவின் முன்னாள் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்திடம் (UNDP) மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் எதிரிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.