யாழில் உற்பத்திப் பொருள் விற்பனை கண்காட்சி – 2022
யாழ். மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு நடாத்தும் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (10) காலை 9.30 மணிக்கு யாழ்.சங்கிலியன் பூங்காவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது
நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலாளர் திருமதி அன்ரன் யோகநாயகம் எழிலரசி, மாநகர சபை ஆணையாளர் தனபாலசிங்கம் ஜெயசீலன் மற்றும் கௌரவ விருந்தினராக தொழிற்துறை திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உதவிப்பணிப்பாளர் தனஞ்சயன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந் நிகழ்வில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், முயற்சியாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வானது விற்பனை மற்றும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதனை நோக்கமாகக் கொண்டு நடைபெறுவதோடு, இதில் மட்பாண்ட உற்பத்திகள் மற்றும் எரிபொருள் அடுப்பு, விவசாய உற்பத்திப் பொருட்கள், உணவு உற்பத்திப் பொருட்கள், ஆடை உற்பத்திகள் மற்றும் பிற உள்ளூர் உற்பத்திப்பொருட்கள் ஆகிய விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.