பிராந்தியம்
பாத்திமா ஸப்னம் இமாரா ஆசிய சாதனை புத்தகத்தில்
காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தர பாடசாலையில் தரம் 01 இல் கல்வி கற்று வரும் மாணவி பாத்திமா ஸப்னம் இமாரா 30 வினாடிகளில் 47 வகையான பூச்சிகளின் பெயரை அசுர வேகத்தில் கூறி சாதனை புரிந்து ஆசிய சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
இவர் வைத்தியர் ஹுஸ்னி மற்றும் சப்னம் சன்ஸிதாவின் புதல்வியாவார். இச்சிறுமி மிகப்பெரும் சாதனையாளராக தனது பெயரை ஆசிய சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.