சிங்கப்பூரில் தங்கியிருந்த பதவி விலகிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) தாய்லாந்து சென்றடைந்துள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை சிங்கப்பூரிலிருந்து வாடகை விமானம் மூலம் தாய்லாந்து பேங்கொக் நேரப்படி இன்று இரவு 8 மணியளவில் பேங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா நேற்று கூறும்போது,
“இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தற்காலிகமாக தாய்லாந்தில் தங்க அனுமதி கோரியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் அவர் தங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம்.
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தாய்லாந்தில் நிரந்தரமாக தங்க அனுமதி வழங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.