பொது
பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பிக்கப்படும்

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களை விரைவில் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாட எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து உப வேந்தர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
உப வேந்தர்களின் கருத்துகளை கேட்டறிந்ததன் பின்னர் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.
மருத்துவ மற்றும் இணை சுகாதார பீடங்களின் செயற்பாடுகள் தற்போதும் இடம்பெறுவதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.