crossorigin="anonymous">
பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் தொழிற் சந்தை

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்திய தொழிற் சந்தை நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (19) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

தொழில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வேலை தேடுவோருக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் முகமாக பத்து தொழில் வழங்குநர்கள் நூற்றியம்பது தொழில் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் வகையில் தொழிற்சந்தை நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்கள இணைப்பாளர், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 1 =

Back to top button
error: