ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்
World Vision நிதி அனுசரைணயில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைத்தல் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு.ரி.என்.சூரியராஜ் அவர்களின் தலைமையில் நேற்று (23) ilko hotel இல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் , திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்தார்
நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் இலங்கையில் அனர்த்த அபாய குறைப்பு முறையின் சட்ட ஏற்றபாடுகள், யாழ் மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரதான இடர்களும் முன்னேற்பாடுகளும், காலநிலை மாற்றத்துடன் கூடிய அனர்த்தங்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்த நிலத்தடிநீர் தேக்கமும் வெள்ளக்கட்டுப்பாடும், ஊடகவியலாளர்களின் வகிபாகமும் பொறுப்புக்களும் போன்ற விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், திட்ட முகாமையாளர் கிலாட்ஸ் றொசைறோ(world vision), பணிப்பாளர் திரு.சுகத் திஸாநாக்க கல்வி விழிப்புணர்வூட்டல் அனர்த்த முகாமைத்துவ பிரிவு , பிரதிப் பணிப்பாளர் திரு.டீ. பொ்னாண்டோ வளிமண்டலவியல் திணைக்களம், உதவிப்பணிப்பாளர் திரு.ஜானக்க கண்டுபதிராஜா பயிற்சி மற்றும் விழிப்புணர்வுப்பிரிவு, திரு.சுஜீபன் நீர்ப்பாசனத் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.