crossorigin="anonymous">
பிராந்தியம்

ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்புப் பிரிவு மற்றும் வேல்ட்விஷன் லங்கா நிறுவனத்துடன் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த ஆபத்து குறைப்பு விழிப்புணர்வு ஒரு நாள் செயலமர்வு நேற்று (24) புதன்கிழமை மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

வேல்ட்விஷன் லங்கா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளரின் வரவேற்புரையினைத் தொடர்ந்து வேல்ட்விஷன் நிறுவன திட்ட முகாமையாளர் ஏ.ஜி.றொசைறோ நிதி அனுசரணையாளர் உரையினையும் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய பயிற்சி மற்றும் விழிப்பூட்டல் பிரிவு பணிப்பாளர் சுகத் திஸாநாயக்க செயலமர்வின் நோக்கம் பற்றியும் கருத்துக்களை வழங்கினர்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், யாழ் பல்கலைக் கழக ஊடகக்கற்கைகள் துறை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 17 − 8 =

Back to top button
error: