crossorigin="anonymous">
பிராந்தியம்

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் உடற்பயிச்சி கூடம்

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா நேற்று (26) இடம்பெற்றது

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கெனடி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உடற்பயிற்சிக் கூடத்தினை திறந்துவைத்துள்ளார்.

மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி இன்றியமையாத ஒரு விடயமாக காணப்படுகிறதன் அடிப்படையில் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களின் நலனையும், நிறுவகத்தின் உத்தியோகத்தர்களின் நலனையும் கருத்திற்கொண்டு குறித்த உடற்பயிற்சிக்கூடம் செரி நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வின் இலங்கை பல்கலை கழக விளையாட்டுத்துறை சம்மேளன தலைவர் கலாநிதி என்.ராஜேஸ்வரன், யுனிசெப் மற்றும் செரி நிறுவனத்தின் உயரதிகாரிகள், கிழக்கு பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் நிறுவக விளையாட்டு துறை பொறுப்பதிகாரி, பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 38 = 47

Back to top button
error: