crossorigin="anonymous">
பிராந்தியம்

இஸ்லாமிய முஹர்ரம் புதுவருட கலைப் பெருவிழா – 2022

காரிகை கலை இலக்கியக் கழகம் வழங்கும் இஸ்லாமிய முஹர்ரம் புதுவருட கலைப் பெருவிழா நேற்று முன்தினம் (27) சனிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காரிகை கலை இலக்கியக் கழகத்தின் ஸ்தாபக தலைவி இலக்கியச் சுடர் திருமதி. ஜாஹிதா ஜலால்தீன் ஜே.பி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்ஷன், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி. எம்.எஸ்.சில்மியா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

நிகழ்விற்கு விசேட அதிதிகளாக சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.குணபாலா, மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.மலர்ச்செல்வன், காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் மௌலவி. எம்.ஐ.எம்.ஜவாஹிர் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உதவியாளர் திருமதி.வீ.சிந்து உஷா ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

சிரேஸ்ட இலக்கிய வாதிகளான கவிமணி புகாரி பாலாஜி , மௌலவி மௌஸ் ( சர்கி) மற்றும் மௌலவி மன்சூர் ஆகியோரும் கலந்து கலந்து சிறப்பித்துள்ளனர்.

அதிதிகள் வரவேற்பினை தொடர்ந்து இறை பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பெண் ஆளுமைகளான 6 பாடசாலை அதிபர்களுக்கு “காரிகை திலகம்” பட்டம் சூட்டப்பட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கவியரங்கு, தகறா, கோலாட்டம், நாட்டார் பாடல் என சிறார்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றிருந்ததன.

அதிதிகளின் விசேட உரைகளைத் தொடர்ந்து, காரிகை கலை இலக்கியக் கழகத்தினால் “கலைத்தீபம்” பட்டம் சூட்டி பிரதம அதிதிகள் உள்ளிட்ட அதிதிகளுக்கு இதன்போது கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு காரிகை கலை இலக்கியக் கழகத்தின் செயலாளர் ஹாஜரா கலீலுர்றகுமான் மற்றும் பொருளாளர் முப்லிஹா பிர்தௌஸ் உள்ளிட்ட கழகத்தின் உறுப்பினர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சிறுவர்கள் பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 54 = 55

Back to top button
error: