பொது
இடைக்கால வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில்
இலங்கை அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடு இலங்கை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இன்று (30) பிற்பகல் 1.00 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடு தொடர்பான விவாதம் நாளை 31ஆம் திகதி மற்றும் எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் 2ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
புதிய அரசாங்கத்தினால் 2022ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள காலப்பகுதிக்காக முன்னர் நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களுக்காக திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்