பொது
ரணில் விக்ரமசிங்க சவூதி அரசாங்கத்துக்கு கடிதம்
இலங்கை அரசாங்கத்தின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சவூதி அரசாங்கத்துக்கு எழுதிய கடிதம், முடிக்குரிய இளவரசரும் பிரதிப்பிரதமரும் மற்றும் பாதுகாப்பு அமைச்சருமான முஹம்மட் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சவூதி அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தை, முடிக்குரிய இளவரசர் சார்பாக, சவூதி அரேபியாவின் பிரதி வெளிநாட்டமைச்சர் வலீத்பின் அப்துல் கரீம் அல்குராஜி பெற்றுக் கொண்டுள்ளார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விஷேட தூதுவராக நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு சவூதி அரேபியா சென்றுள்ள சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட், இக்கடிதத்தை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.