பிராந்தியம்
மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா
(நதீர் ஷரீப்தீன்)
இரத்தினபுரி – பலாங்கொடை சீ.சீ தமிழ் மகா வித்தியாலயத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா மிகவும் விமர்சையாக அண்மையில் (24.08 2022) நடைபெற்றது.
மகா வித்தியாலய அதிபர் பி.தம்பிராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பலாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ஆர் வினோத்கண்ணன் அவர்களும்
இந்நிகழ்வில் விசேட அதிதியாக பலாங்கொடை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. ஜெயக்கொடி அவர்களும் மேலும் பொது சுகாதார பரிசோதகர், ஆசிரியர் ஆலோசகர், பாடசாலையின் ஆசிரியர் குழாம் உற்பட பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் பங்கு பற்றி இவ்விழாவை சிறப்பித்திருந்தனர்.