சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ‘ICC Hall of Fame’ பட்டியலில் குமார் சங்கக்கார சேர்ப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலை சிறந்து கிரிக்கெட் வீரர்கள் ஹால் ஆஃப் ஃபேம் (ICC Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
1996 – 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்கள் என்ற ரீதியில் குமார் சங்கக்கார இவ்வாறு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்திருந்த முதலாவது இலங்கை வீரராவார், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை சிறப்பிக்கும் வகையிலும், முதன் முதலாக ஜூன் 18 – 22 இடம்பெறவுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியுடன் தொடர்புபட்டதாக குமார் சங்கக்கார அடங்களாக 10 பேருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (ICC Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கம்.